கோடிக்கணக்கில் சம்பளத்தை இழந்த ஜெயம் ரவி..!! எதற்காக தெரியுமா..?


சினிமாவை பொறுத்தவரை பஞ்சாயத்து இல்லாமல் பழைய சோறு கூட இறங்காது! நிலைமை அப்படியிருக்க…. டிக்டிக்டிக் படம் மட்டும் எப்படி பஞ்சாயத்தில்லாமல் ரிலீஸ் ஆகும்? வழக்கம் போலவே ரிலீசுக்கு முதல் நாள் விஷால் தலைமையில் கூடியது பஞ்சாயத்து.

ஒவ்வொரு தடையாக உடைத்துக் கொண்டே வந்தார்கள். இறுதியில் நின்றது ஜெயம் ரவியின் செக் போஸ்ட்.

சாரே… என்ன பிரச்சனை?

எனக்கு நாலு கோடி சம்பள பாக்கி. அதை கொடுத்துட்டு படத்தை ரிலீஸ் பண்ணச் சொல்லுங்க.

விசாரித்தால், ஏழு கோடி சம்பளம் என்று நிர்ணயித்த ஜெயம் ரவி, மூன்று கோடியை அட்வான்சாக வாங்கிக் கொண்டு படத்தையே முடித்துக் கொடுத்துவிட்டார். மீதம் வரவேண்டிய 4 கோடிக்குதான் இந்த இழுபறி.

ஆனால் தலைக்கு மேல் கையெடுத்து கும்பிட்டாராம் தயாரிப்பாளர். இவங்க சொன்னது ஒரு பட்ஜெட். முடிஞ்சது வேற பட்ஜெட். ரெண்டுக்கும் இன்னும் போடவே படாத எட்டு வழி சாலை லெங்க்த் இருக்கு. நான் எங்க போவேன்? எப்படி சமாளிப்பேன்? என்று தயாரிப்பாளர் தவியாய் தவிக்க… நிஜத்தை புரிந்து கொண்ட பஞ்சாயத்தார் பரிதவித்துப் போனார்களாம்.

ஏனுங்க ரவி… அவருதான் அவ்ளோ கஷ்டப்படுறாருல்ல? இன்னும் ஒரு கோடி தரச் சொல்றோம். வாங்கிகிட்டு க்ளியர் பண்ணி விட்ருங்க என்றார்களாம். வேறு வழியில்லாமல் தலையாட்டிய ஜெயம் ரவி, மொத்தத்தில் நான்கு கோடியோடு அமைதியாகிவிட்டார்.

அதற்கப்புறம் வந்தது டிக்டிக்டிக். முதல் மூன்று நாளுக்கு மேல் ஏறவில்லை என்றாலும், தயாரிப்பாளருக்கு நஷ்டமில்லை என்கிறார்கள். என்ன ஒன்று? பெருமளவு தொகையுடன் விற்க வேண்டிய ஏரியாக்களை கூட, அவசரத்திலும் பதற்றத்திலும் குறைந்த விலைக்கே விற்றுவிட்டாராம்.

நிலாவுக்கு போறதுன்னா சும்மாவா?

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!