இளம் ஹீரோவுடன் ரொமான்ஸ் செய்யும் நயன்தாரா..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் நடிகை நயன்தாரா இப்போதும் நம்பர் 1 நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், இரண்டாம் கட்ட ஹீரோக்களான சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என நடித்துக்கொண்டிருந்த இவர். தற்போது மூன்றாம் கட்ட நடிகர்களுடனும் ஜோடி போட தயாராகி வருகிறார்.

இயக்குனர் A.L.விஜய் தனது இயக்கத்தில் வெளியான மதராசபட்டினம், தெய்வத்திருமகள், இது என்ன மாயம் போன்ற படங்களுக்கு இசையமைப்பாளராக இருந்த ஜீ.வி.பிரகாஷ்-ஐ தற்போது தனது அடுத்த படத்தின் ஹீரோவாக்கியுள்ளார்.


இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ்-ற்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவை அணுகியுள்ளார் A.L.விஜய். இதற்கு நயன்தாராவும் கிட்டதட்ட சம்மதம் சொல்லிவிட்டார் என்றே தெரிகின்றது. 34 வயதாகும் நயன்தாரா , 31 வயதான ஜீ.வி.பிரகாஷுடன் ரொமான்ஸ் செய்ய சம்மதித்தது குறித்த அறிந்த ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் கிடக்கிறார்கள்.

ஏற்கனவே, நடிகர் சிவகார்த்திகேயனுடன் நடித்த நயன்தாரா அவருக்கு அக்கா போல இருக்கிறார் என்று ரசிகர்கள் கூறினார்கள். இந்நிலையில் இன்னும் ஒரு படி மேல சென்று இப்போது, ஜீ.வி.பிரகாஷுடன் நடிக்கப்போகிறார் நயன்தாரா.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!