ஆத்தாடி.. போதைக்கு அடிமையாகிய பிரபல நடிகைக்கு இப்படியொரு நிலைமையா..?


சினிமா நட்சத்திரங்களில் பலர் வெவ்வேறு விதங்களில் அடிமையாகி வருகின்றனர். கடந்த ஆண்டு தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த பலர் போதைக்கு அடிமையாகி இருந்ததாக பரபரப்பாக தகவல்கள் வெளிவந்தன. பிறகு அந்த விஷயம் அப்படியே அமுங்கிவிட்டது. ஆனால் சில நட்சத்திரங்கள் வேறு சில விஷயங்களுக்கு அடிமையாகிவிடுகின்றனர். ஒரு சிலர் சாப்பாட்டு பிரியராக இருப்பர். பீட்ஸா, பர்கர், பிரியாணிக்கு அடிமையாவதுண்டு. இன்னும் சிலர் விதவிதமான உடைகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவர்.

தமிழில் ‘முகமூடி’ படத்தில் நடித்தவர் நடிகை பூஜா ஹெக்டே. தற்போது இவர் ஒரு விஷயத்துக்கு ரொம்பவும் அடிமையாகிவிட்டதாகவும் அதை விட முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவரே கூறுகையில், ‘‘என்னை ரொம்பவும் அடிமையாக்கியது கூலிங் கிளாஸ் அணியும் பழக்கம்தான். என் வீட்டில் அடுக்கடுக்காக கூலிங்கிளாஸ் வாங்கி வைத்திருக்கிறேன். எப்போது ஷாப்பிங் சென்றாலும் கூலிங்கிளாஸ் வாங்கத் தவறமாட்டேன். என் வீட்டில் உள்ளவர்கள் கூட எதற்காக இவ்வளவு கூலிங்கிளாஸ் வாங்கி வைத்திருக்கிறாய் என்று கிண்டலடிப்பார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!