அவர் நடிகர் அல்ல.. எங்களின் குலதெய்வம்..!! மும்பை ரசிகர்கள் பெருமிதம்..!!


இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் காலா. கிட்டத்தட்ட 6000க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மும்பையின் தாராவியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை மும்பை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். காலா படம் வெற்றியடைய வேண்டி அங்குள்ள கோவிலில் பிரார்த்தனை செய்து, பாரம்பரிய உடையில் பால்குடம் எடுத்து வந்து ரஜினியின் 67 அடி உயர கட் அவுட்டிற்கு அபிஷேகம் செய்துள்ளனர்.

மேலும், காலா ரஜினியைப் போன்று கருப்பு நிற சட்டையும், லுங்கியும் அணிந்து கொண்டு வெள்ளை நிற தாடியுடன் வலம் வந்துள்ளனர். இந்த நிலையில், ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் கூறுகையில், 50க்கும் மேற்பட்ட பெண்கள் கோவிலில் இருந்து தியேட்டர் வரை சென்று ரஜினிக்கு பாலாபிஷேகம் செய்துள்ளனர். மேலும், ரஜினியின் உருவத்தை முதுகில் வரைந்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர். மேலும், ரஜினி நடிகர் அல்ல, அவர் எங்களது குல தெய்வம் என்று கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!