ஆபாச வசனங்களால் தயாரிக்கப்பட்ட படத்திற்கு இப்படியொரு நிலைமையா..? அதிர்ச்சியில் திரையுலகம்..!!


குழந்தை பெற்ற பிறகு கரீனா கபூர் மற்றும் திருமணத்திற்கு பிறகு சோனம் கபூர் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ’வீர தி வெட்டிங்’. சஷான்ஷா கோஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஸ்வாரா பாஸ்கர், சுமீத் வியாஸ் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இரண்டு வருட இடைவேளைக்கு பிறகு கரீனா கபூர் நடிக்கும் படம் என்பதால், ’வீர தி வெட்டிங்’ இந்தியளவில் பலத்த எதிர்பார்ப்புகளை பெற்றுள்ளது. நாளை உலகளவில் வெளியிடப்படும் இப்படம், பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரட்டை அர்த்த வசனங்கள் மற்றும் உணர்வுகளை தூண்டும் காதல் காட்சிகள் உள்ளதால் இப்படம் தடை செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் நாட்டின் தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது. அந்நாட்டில் ’வீர தி வெட்டிங்’ படத்தை எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் பலர் இதனால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


பாகிஸ்தானில் இந்த படத்தை வெளியிட தயாராக இருந்த விநியோக நிறுவனங்களும் பின் வாங்கியதால், இந்த முடிவை எடுத்துள்ளதாக பாகிஸ்தான் திரைப்பட தணிக்கை வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

திருமணத்திற்கு முன்னால் நெருக்கமாக உள்ள நான்கு பெண் நண்பர்களின் நட்பு திருமணம் மற்றும் அது தொடர்பான சூழ்நிலை எழும் போது மீண்டும் தொடர்கிறதா என்ற பின்னணியில் ’வீர திங் வெட்டிங்’ திரைப்படம் தயாராகியுள்ளது.

நாளை முதல் திரைக்கு வரும் இப்படம், நவீன கலாச்சார உலகின் பக்கங்களையும், அதில் பெண்களின் உலகம் எவ்வாறு இயங்குகிறது என்ற வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் தயாரிப்பாளர் ரியா கபூர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!