தூத்துக்குடி சமபவம்… “முதுகெலும்பு இல்லாத அரசு. தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும்” – பிரகாஷ் ராஜ் கண்டனம்..!!


தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 18க்கும் மேற்பட்ட கிராம மக்கள், நேற்று 100-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையின் தடுப்பை மீறி, போராட்டத்தின் போது ஆயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றனர். அப்போது காவல் துறையினருக்கு, மக்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. பின்னர் தடையை மீறி மக்கள் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.

இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச்சூட்டில் 3 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட நடிகர் பிரகாஷ் ராஜ் சொந்த மக்கள் போராடியபோது கொன்றதற்கு தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும். முதுகெலும்பு இல்லாத அரசு. போராட்டக்காரர்களின் அழுகுரல் அரசுக்கு கேட்கவில்லையா ? மாவட்ட மக்கள் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து அச்சம் கொண்டுள்ளனர். ஆனால் தமிழக அரசு ஆட்சியை பாதுகாக்க மத்திய அரசின் இசைக்கு, நடனமாடிக் கொண்டு இருக்கிறது என காட்டமாக பதிவிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!