சிம்புவை தான் மறைமுகமாக தாக்கி அப்படி சொன்னாரா ஆதிக் ரவிச்சந்திரன்?

திரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். அதன் பின் சிம்புவின் அன்பானவன் அசரதவன் அடங்காதவன் என்ற படத்தை இயக்கி இருந்தார். படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட முடிவெடுத்து முதல் பாகத்தை ரிலீஸ் செய்த நிலையில் அது படுதோல்வி அடைந்தது. அதன் பின் இரண்டாம் பாகத்தையும் கைவிட்டுவிட்டனர்.

அந்த படத்தில் ஹீரோயினாக நடித்த தமன்னாவுக்கு தற்போது பிறந்தநாள் வாழ்த்து கூறிய ஆதிக், சிம்புவை மறைமுகமாக தாக்கும் வகையில் பேசி இருக்கிறார்.

“Will work with u again soon but this time on a fully completed film” என அவர் குறிப்பிட்டு இருக்கிறார். “விரைவில் மீண்டும் ஒன்றாக பணியாற்றலாம். ஆனால் இந்த முறை ஒரு முழுமையான படத்தில்” என தான் ஆதிக் தெரிவித்து இருக்கிறார்.

அவர் சிம்புவை தான் மறைமுகமாக அட்டாக் செய்து இருக்கிறாரோ என நெட்டிசன்கள் சந்தேகம் எழுப்பி இருக்கின்றனர்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!