பிரபல காமெடி நடிகரை பாராட்டிய விஜய்..!! எதற்காக தெரியுமா..?


நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் பாடல் ஒன்று சமீபத்தில் வெளியானது. இந்தப் பாடல் தற்போது செம வைரலாகி வருகிறது. இந்தப் பாடலில் காமெடி நடிகர் யோகி பாபு, நடிகை நயன்தாராவிடம் தன் காதலை சொல்லும் விதத்தில் படமாக்கப்பட்டிருந்தது. “எனக்கு கல்யாண வயசு தான் வந்துடுச்சி டி” என துவங்கும் இந்த பாடலை நடிகர் சிவகார்திகேயன் எழுதியுள்ளார்.


தற்போது இந்த வீடியோ 4 மில்லியன் பார்வைகளுக்கு மேல் பெற்றுள்ளது. இந்த பாடலை பார்த்துவிட்டு நடிகர் விஜய் யோகி பாபுவை பாராட்டினாராம். சமீபத்தில் தான் நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘நடிகையர் திலகம்’ படத்தை பார்த்துவிட்டு அவரை படசெட்டில் நேரில் பாராட்டியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!