ஆட்டோ ஓட்டும் பிரபல நடிகையால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


தற்போது நடிக்க வரும் நடிகைகள், நாயகனுக்கு இணையாக நடிக்க தங்களை தயார்படுத்தி வருகின்றனர். அதாவது ஆக்ஷன் சீனில் நடிக்க ரெடியாக இருக்கின்றனர். இந்நிலையில் மலையாள நடிகை அனுஸ்ரீ தற்போது ஆட்டோ ஓட்டுனராக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இவர் மலையாளத்தில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.


தற்போது இவர், சுஜித் வாசுதேவ் இயக்கத்தில் ‘ஓட்டர்ஷா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இவர் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுபவராக நடித்து வருகிறார். தற்போது அவர் நிஜத்தில் ஆட்டோ ஓட்டுவது போல் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. இந்தப் புகைப்படத்தைப் பார்த்த பலரும் அனுஸ்ரீக்கா இந்த நிலைமை என்று பலரும் வருத்தப்பட்டு வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி