சர்ச்சை நாயகியை கதாநாயகியாக்கிய பிரபல இயக்குனர்..!! அதிர்ச்சியில் திரையுலகம்..!!


சமீபத்தில் அரை நிர்வாண கோலத்தில் நடுரோட்டில் போராட்டம் நடத்திய நடிகை ஸ்ரீரெட்டியை வைத்து பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

தெலுங்கு சினிமாவில் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தன்னை படுக்கை அழைத்து தன்னுடைய வாழ்க்கையை சீரழித்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. இவரின் இந்த புகாரால் இந்திய திரையுலகமே அதிர்ச்சிக்குள்ளானது.


இவருடைய ஸ்ரீலீக்ஸ் முகநூல் பக்கத்தில் பிரபல இயக்குனர் சேகர் கம்முலு, கதாசிரியர் கோனா வெங்கட், நகைச்சுவை நடிகர் விவா, தயாரிப்பாளர் வெங்கட் அப்பாராவ், நடிகர் ராணாவின் தம்பி அபிராம் ஆகியோர் சிக்கினார்கள்.

தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை எதிரில் ஸ்ரீரெட்டி அரைநிர்வாண போராட்டம் நடத்தினார். இதனால் அவருக்கு படங்களில் நடிக்க தெலுங்கு நடிகர் சங்கம் தடை விதித்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!