அம்மாவின் முகத்தை தொலைக்காட்சியில் பார்த்ததும் கதறி அழுத ஸ்ரீரெட்டி..!!


அரை நிர்வாண போராட்டம் செய்த ஸ்ரீரெட்டி, தனது அம்மாவின் பேட்டியை டிவியில் கண்டதும் கதறி அழுதுள்ளார்.

தெலுங்கு சினிமாவில் நடிகையாக இருந்து வருபவர் நடிகை ஸ்ரீரெட்டி. தற்போது இவர் கடந்த சில நாட்களாக தெலுங்கு திரையுலகில் பல பரபரப்பு சம்பவங்களை ஏற்படுத்தி வருகிறார். இவர் தன்னிடம் நிறைய சினிமா பிரபலங்கள் தவறாக நடந்து கொண்டதாக கூறி சிலர் பற்றிய ஆதாரங்களையும் வெளியிட்டு வருகிறார். இதனால் தெலுங்கு திரையுலகில் தினம் தினம் பரபரப்பான சூழ்நிலை நிலவிவருகிறது.

இந்த நேரத்தில் நடிகை ஸ்ரீரெட்டியின் அம்மா பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்துள்ளார். அதில் அவர், ‘‘என் மகள் மிகவும் வித்தியாசமானவர். நல்லவர். இதுவரை அவருக்கு நேர்ந்த எந்த விஷயத்தையும் என்னிடம் கூறவில்லை. இந்த விஷயத்தில் என்னுடைய உதவி தேவைப்பட்டு அவர் கேட்டால் நான் உதவ தயாராக இருக்கிறேன்’’ என்று அம்மா கூறினார். இந்த அம்மாவின் பேட்டியை கேட்டதும் ஸ்ரீரெட்டி உடனே கதறி அழுதுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி