எஸ்.ஜே.சூர்யாவுடன் ஜோடி சேரும் இளம் நடிகை..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


நெல்சன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

‘ஒருநாள் கூத்து’ படத்தை இயக்கியவர் இயக்குனர் நெல்சன். தற்போது இவர் எஸ்.ஜே.சூர்யாவை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த பிரியா பவானிசங்கர் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இவர் ரத்னகுமார் இயக்கத்தில் ‘மேயாத மான்’ படத்தின் வைபவ் ஜோடியாக நடித்தார்.


தற்போது பிரியா பவானி சங்கர், நடிகர் கார்த்தியை வைத்து பாண்டிராஜ் இயக்கி வரும் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில், கார்த்தியின் முறைப் பெண்ணாக நடிக்கிறார். தொடர்ந்து, இயக்குனர் ஈனாக் இயக்கும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தில், ‘மேயாத மான்’ படத்தில் நடித்த இந்துஜாவும் நடிக்கிறார்.

இயக்குனர் நெல்சன், எஸ்.ஜே.சூர்யா பட சம்பந்தப்பட்ட வேலைகளைத் தொடங்கியிருக்கிறார். இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி