சிம்பு படத்தில் உதவி இயக்குனராகிய இளம் நடிகர்..!! வயிற்றெரிச்சலில் சக நடிகர்கள்..!!


சிம்புவை வைத்து நெல்சன் இயக்கிய ‘வேட்டை மன்னன்’ என்ற படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

நடிகர்கள் சிம்புவும், சிம்புவும் சிவகார்த்திகேயனும் இதுவரை ஒரு படத்தில் கூட இணைந்து நடித்ததில்லை. இருந்தாலும் இவர்கள் இருவரும் ஒரு படத்தில் பணியாற்றியுள்ளனர். நெல்சன் இயக்கத்தில் சிம்பு நடித்த படம் ‘வேட்டை மன்னன்’. இந்தப் படம் எதிர்பாரா விதமாக கைவிடப்பட்டது. இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் உதவி இயக்குனராக பணியாற்றினாராம்.


விஜய் டிவியில் இருந்து வந்தவர்கள் என்பதால் இயக்குனர் நெல்சனும் சிவகார்த்திகேயனும் ஏற்கனவே நண்பர்கள். எனவே நெல்சன் இயக்கிய ‘வேட்டை மன்னன்’ படத்தில் சிவகார்த்திகேயன் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். சிம்பு பேசும் வசனங்களை எடுத்து கொடுப்பவர் இவர்தானாம். இந்தச் செய்தியை நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி