பிரபல மலையாள நடிகர் உடல் நலக்குறைவால் மரணம்..!! ஆழ்ந்த சோகத்தில் திரையுலகம்..!!


பிரபல மலையாள நடிகர் கொல்லம் அஜித். இவர் கேரள மாநிலம் கோட்டயத்தை பூர்வீகமாக கொண்டவர். ஆனால் அவரது தந்தையின் பணி காரணமாக இவரது குடும்பம் கொல்லத்தில் வசிப்பதால் அவரது பெயருடன் கொல்லம் ஒட்டிக் கொண்டது.

1983-ம் ஆண்டு டைரக்டர் பத்மராஜனின் ‘பரன்னு பரன்னு பரன்னு’ என்ற படத்தின் மூலம் மலையாள திரையுலகில் கொல்லம் அஜித் அறிமுகம் ஆனார். குறுகிய காலத்தில் மலையாளம் உள்பட 500-க்கும் மேற்பட்ட தென்னிந்திய மொழி படங்களில் நடித்தவர்.

இவர் பெரும்பாலும் வில்லன் வேடங்களிலேயே நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். 1990-ம் ஆண்டு இவர் மலையாள திரையுலகில் உள்ள பிரபல நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்த படங்கள் வெளியாகி இவருக்கு புகழ் சேர்த்தது.


கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ‘இவன் அர்த்தநாரி’ என்ற படம் தான் கொல்லம் அஜித் நடித்த கடைசி படமாகும். அவருக்கு வயிறு தொடர்பான நோய் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அதன்பிறகு அவர் படங்களில் நடிக்க வில்லை.

உடல்நலக்குறைவுக்காக சிகிச்சை பெற்று வந்த கொல்லம் அஜித்தின் உடல் நிலை மோசமானதை தொடர்ந்து அவர் சமீபத்தில் கொல்லத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை 3.40 மணிக்கு நடிகர் கொல்லம் அஜித் மரணம் அடைந்தார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி