ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கு நிகழ்வை அரசு மரியாதையுடன் நடத்த உத்தரவிட்டது யார் தெரியுமா..?


திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக துபாய் சென்ற ஸ்ரீதேவி, தான் தங்கியிருந்த ஹோட்டலின் குளியலறையில் மூழ்கி மரணமடைந்தார். அவருடைய உடல் மும்பை கொண்டு வரப்பட்டு, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது.

‘நடிகைக்கு அரசு மரியாதையா?’ என அப்போது விமர்சனங்கள் எழுந்தன. ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கு குறித்த முழு விபரத்தை, அனில் என்ற சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார்.


அதில், யாருக்கு அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்கு நடத்தவேண்டும் என்று முடிவெடுக்கும் உரிமை மாநில அரசுக்கு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா முதல்வர் அலுவலகத்தில் இருந்து வாய்மொழி உத்தரவு தரப்பட்டது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி