திருமணமான சில நாட்களிலே இப்படியொரு முடிவா..? என்ன காரணம் தெரியுமா..?


தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்த நடிகை ஸ்ரேயா, 2001-ம் ஆண்டு இஷ்டம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படத்தில் இரண்டாம் கதாநாயகியாக அறிமுகமானார். மழை படம் மூலம் நல்ல வரவேற்பை பெற்று பல முன்னணி நடிகர்களோடு நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார் ஸ்ரேயா.

பிறகு கதாநாயகியில் இருந்து, குணசித்ர நடிகையாக மாறி, தற்போது அந்த வாய்ப்பும் இல்லாமல் தெலுங்கு படங்களுக்கு முக்கியத்தும் கொடுத்து வந்த ஸ்ரேயா


திடிரென்று அவரது வீட்டிலேயே ஸ்ரேயா ரஸ்யாவை சேர்ந்த Andrei Koscheev-வை திருமணம் செய்துகொண்டார்.தாய்க்கு இவரது திருமணத்தில் விருப்பமில்லாததால் தான் ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாக கூறினார்.

இந்த நிலையில், ஸ்ரேயா திருமணத்தை தொடர்ந்து, நடிக்கப்போவதாக கூறினார். அண்மையில் கூட இவர் தெலுங்கு மூத்த நடிகர் வெங்கடேஷ் படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி வெளியானது. ஆனால் தற்போது இவரது கணவர் வீட்டிற்கு செல்ல போகிறாராம். ஆம் ரஷ்யாவில் குடியேறப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போ ஸ்ரேயா இனி படங்கள் நடிக்கமாட்டாரா.?

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி