அந்த வயதிலிருந்தே ஆரம்பித்தது இன்னும் முடியவே இல்லை..!! கவர்ச்சி நடிகை அதிரடி டாக்..!!


வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் தற்போது மும்பையில் செட்டிலாகி பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்தார்.

வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார் சன்னி. இந்நிலையில் அவர் தனது வாழ்க்கை, சினிமா பற்றி கூறியதாவது,


என் பெற்றோரும், சகோதரரும் என்னை பாதுக்காக தேவையான அனைத்தையும் செய்தனர். அனைத்து குடும்பங்களை போன்றும் எங்கள் குடும்பத்திலும் சில பிரச்சனைகள் உள்ளது.

நான் இந்தியா வந்ததால் தான் மக்கள் என்னை கடுமையாக விமர்சிக்கிறார்கள் என்று பலரும் தவறாக நினைத்துள்ளனர். 21 வயதில் இருந்து எனக்கு வெறுப்பை கக்கும் இமெயில்களும், எதிர்மறை விமர்சனங்களும் வருகின்றது. இது நாட்டை பொறுத்தது அல்ல சமூகத்தை பொறுத்தது. 21 வயதில் தான் முதன் முதலாக வெறுப்புகளை எதிர்கொண்டேன்.


என் பெற்றோர் விரும்பாத திசையில் நான் சென்றேன். ஆனால் என் வாழ்க்கை எனக்கு பிடித்துள்ளது. அனைத்தும் ஒரு காரணத்திற்காக நடக்கும். நான் எந்த குறையும் சொல்ல விரும்பவில்லை.

21 வயதில் மக்களின் வெறுப்பை பார்த்து மனதளவில் நெறுங்கிவிட்டேன். என் குழந்தைகள் யாரையும் ஏமாற்றக் கூடாது, திருடக் கூடாது என விரும்புகிறேன். நான் எதிர்கொண்ட வெறுப்பை அவர்கள் எதிர்கொள்ளக் கூடாது என்றார் சன்னி லியோன்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி