கதையின் நாயகனாக ‘ஜெய்பீம்’ மணிகண்டன் by priya | @ | February 17, 2023 9:06 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest ‘ஜெய் பீம்’ படத்தில் நடித்து பிரபலமான மணிகண்டன் கதையின் நாயகனாக நடித்துள்ள புதிய படத்துக்கு `குட் நைட்’ என பெயரிடப்பட்டு உள்ளது. நாயகியாக மீதா ரகுநாத் நடிக்கிறார். ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், பகவதி பெருமாள், ரேச்சல் ரெபாக்கா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை விநாயக் சந்திரசேகரன் டைரக்டு செய்கிறார். படம் பற்றி அவர் கூறும்போது, “குறட்டையை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் குடும்ப உறவுகளின் முக்கியத்துவமும் இடம் பிடித்திருக்கிறது. தூங்கும் போது ஒருவர் விடும் குறட்டை, எப்படி மற்றவர்களை பாதிக்கிறது என்பதை நகைச்சுவையாகவும், அர்த்தமுள்ள கதையாகவும் உருவாக்கி இருக்கிறோம்” என்றார். இந்த படத்தின் முதல் தோற்றம் வெளியாகி உள்ளது. ஒளிப்பதிவு: சேதுமாதவன், இசை: ஷான் ரோல்டன். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts படப்பிடிப்புக்கு சரியாக வருவது இல்லையா? வதந்திக்கு யோகிபாபு விளக்கம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… ரசிகரின் ஆபாச கேள்வியால் நடிகை ஷாலு ஷம்மு கோபம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… விஜய் போல் என்னால் நடனம் ஆட முடியாது நடிகர் ஷாருக்கான் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து…