அஜித்தை பின்பற்றும் தளபதி விஜய்.. அதுவும் எந்த விஷயத்தில் தெரியுமா

விஜய் நடிக்கும் தளபதி 66
வம்சி இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தளபதி 66. குடும்ப கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். தமன் இசையமைக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிக்கா முதன் முறையாக நடிக்கிறார்.

மேலும், பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், பிரபு, குஷ்பூ என பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் முடிவுவரவிருக்கிறது.

அஜித்தை பின்பற்றும் விஜய்
மேலும், இப்படத்தின் First லுக் வருகிற ஜூன் 22 தளபதி விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு ‘Vaarasudu’ என தெலுங்கில் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாம். இதற்கு அர்த்தம் ‘Successor, வாரிசு’ என்று கூறப்படுகிறது.

ஆனால், மற்றொரு புறம் இப்படத்தின் தலைப்பு ‘V’ வார்த்தையில் துவங்கும் என்று கூறி வருகிறார்கள். இந்நிலையில் அஜித் தான் நடித்த பல படங்களில் ‘ வீரம், வேதாளம், விவேகம், வலிமை’ என்று வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது நடிகர் விஜய்யும் அஜித்தை போலவே ‘V’ வார்த்தையில் துவங்கும் தலைப்பை தன்னுடைய படங்களுக்கு வைக்க துவங்கிவிட்டார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். ஆனால், இப்படத்தின் உண்மையாக தலைப்பு என்ன என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!