ஒருவேளை பீஸ்ட் ஹிட்டாகி இருந்தால்.. விஜய்யை மோசமாக கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்

விஜய் – நெல்சன் கூட்டணியில் கடந்த ஏப்ரலில் ரிலீஸ் ஆன பீஸ்ட் படம் நெகடிவ் விமர்சனங்களை தான் அதிகம் பெற்றது. அதனால் படமும் எதிர்பார்த்த அளவுக்கு வசூலை பெறவில்லை. போட்டிக்கு ரிலீஸ் ஆன கேஜிஎப் 2 படம் தமிழ்நாட்டிலும் வசூல் சாதனை படைத்தது.

பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் தொடர்ந்து கடும் ட்ரோல்களை இதனால் சந்தித்து வருகின்றனர். தற்போது சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருக்கும் கமல்ஹாசனின் விக்ரம் படம் ஹிட் ஆகி இருக்கும் நிலையில் நெட்டிசன்கள் நெல்சனை தான் குறிவைத்து ட்ரோல் செய்கின்றனர்.


பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் ட்விட்டரில் விஜய், நெல்சன் இருவரையும் ட்ரோல் செய்யும் வகையில் ஒரு பதிவை போட்டிருக்கிறார்.

நேற்று விக்ரம் பட தயாரிப்பாளரான கமல் இயக்குனர் லோகேஷுக்கு ஒரு சொகுசு காரை பரிசாக கொடுத்து இருந்தார். ஒரு வேளை பீஸ்ட் படம் ஹிட் ஆகி இருந்தால் விஜய்க்கு நெல்சன் என்ன கொடுத்திருப்பார் என கலாய்க்கும் வகையில் அந்த பதிவு இருந்தது.  

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!