நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம்.. உறவினர்கள் அதிருப்தி

திருமணம் என்றால் நாலு பேர் வந்து வாயார வாழ்த்த வேண்டும் என்பார்கள். ஆனால் திருமண நிகழ்ச்சியையும் விற்று ரூ.25 கோடி பணத்தை பார்த்ததால் பணம் பந்திக்கும், குணம் குப்பைக்கும் சென்ற கதையாகி விட்டது. விக்னேசின் சொந்த ஊர் திருச்சி அருகே உள்ள லால்குடி. லால்குடி வடக்கு தெருவை சேர்ந்த சிவக்கொழுந்து-மீனாகுமாரி தம்பதியின் மகன்தான் விக்னேஷ் சிவன். விக்னேஸ்வரன் என்ற தனது இயற்பெயரை சினிமாவுக்காக விக்னேஷ் சிவன் என்று மாற்றிக் கொண்டிருக்கிறார்.

விக்னேஷ் சிவன்-நயன்தாரா திருமணம் குறித்து தெரிந்ததும் உறவினர்கள் எதிர்ப்பு குரலை உயர்த்தினாலும் அதை விக்னேஷ் தாயார் கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது. அதேநேரம் லால்குடியை சேர்ந்த உறவினர்கள் நயன்தாராவை தங்கள் ஊர் மருமகளாக பார்த்ததோடு மட்டுமல்லாமல், திருமணத்திற்குப் பிறகு ஒருவேளை நயன்தாரா லால்குடிக்கு வந்தால் என்ன செய்யவேண்டும் என்று ஒரு பட்டியலையே தயாரித்து வைத்திருந்தனர்.

ஆனால் லால்குடியில் இருக்கும் சொந்தங்களையும், ஊராரையும் திருமணத்திற்கு விக்னேஷ் சிவன்-நயன்தாரா அழைக்காதது அவர்களை வேதனையடையச் செய்துள்ளது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், விக்னேஷை சொந்தப் பையனாகவே நாங்க பாத்துக்கிட்டோம். அவனோட அம்மா-அப்பா சென்னையில வேலைக்கு சென்றதால் அவரையும், அவரது சகோதரியையும் செல்லமா பார்த்துக்கொண்டோம்


நாங்க ரொம்ப எதிர்பார்ப்போடு காத்திருந்தோம், நயன்தாராவுக்கு திருமண பரிசு முதற்கொண்டு தயார் செய்து வைத்திருந்தோம். ஆனால் அவர்கள் நாங்கள் சினிமாக்காரர்கள் என்பதை காட்டி விட்டனர். விக்னேஷ் சிவனை ஆசையாய் வளர்த்த பெரியப்பா, பெரியம்மாவைக்கூட திருமணத்திற்கு அழைக்கவில்லை.

விக்னேஷ் சிவன் குடும்பம் லால்குடியில செல்வாக்கான குடும்பம். பாரம்பரியமான பெரிய குடும்பம். இங்க உள்ள சொந்தக்காரங்கள கூப்பிடாம அவர்கள் கல்யாணம் நடக்கிறது வேதனையாக உள்ளது. முதலில் திருப்பதியில கல்யாணம் என்றபோது நாங்கள் எப்படி போய்ட்டு வரதுன்னு யோசிச்சோம், ஆனா சென்னையிலத்தான் என்றதும் மகிழ்ந்தோம். ஆனால் அங்கும் எங்களுக்கு அனுமதி கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என்றனர்.

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!