லெஸ்பியன் தொடர்பான முதல் தமிழ் திரைப்படத்திற்கு குவியும் விருதுகள்..!! எதற்காக தெரியுமா..?


ஒரே பால் மனிதர்கள் இடையேயான உறவுகள், காதல் பற்றி ஆங்கிலத்தில் நிறைய படங்கள் வெளிவந்திருக்கின்றன. ஆண்களை ஆண்களே விரும்புவர்களான ‘கே’ பற்றியும், பெண்களை பெண்களே விரும்பும் ‘லெஸ்பியன்’ பற்றியும் படங்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால், தமிழில் அப்படியான படங்கள் வந்ததில்லை. சில படங்களில் ஒருசில காட்சிகள் மட்டும் அவற்றைப் பற்றி வைக்கப்பட்டிருக்கின்றன.

தற்போது ஓரின பால் ஈர்ப்பாளர்களை பற்றிய ஒரு முழு நீள தமிழ் படம் தயாராகி இருக்கிறது. அதன் டைட்டில் ‘என் மகன் மகிழ்வன்’ (My son is gay).


ஓரின ஈர்ப்பாளராக இருக்கும் தன் மகனின் பிரச்னைகளை ஒரு தாய் எப்படி கையாளுகிறார் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

இந்தப் படத்தில் தாயாக அனுபம் குமாரும், மகனாக அஸ்வின்ஜித்தும் நடித்துள்ளனர். இவர்கள் தவிர அபிஷேக் ஜோசப், ஜெயபிரகாஷ், ஸ்ரீரஞ்சனி ஆகியோர் முக்கிய நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் விரைவில் திரையரங்குகளில் திரையிடப்பட இருக்கிறது.


மெல்போர்ன், நியூயார்க், கோல்கட்டா, சென்னை, ராஜஸ்தான், பிலடெல்பியா நகரங்களில் நடந்த பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, மக்களின் கவனத்தை ஈர்த்த படம் இது. சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த இரண்டாவது இந்தியன் வேர்ல்ட் பிலிம் ஃபெஸ்டிவலில் இப்படம் திரையிடப்பட்டு சிறந்த படமாகத் தேர்வு செய்யப்பட்டு விருது அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி