பிக்பாஸ் சீசன் 2-வை தொகுத்து வழங்க போவது இவர்தானாம்..!! அதிரடி அறிவிப்பால் குஷியில் ரசிகர்கள்..!!


இளசுகள், இல்லத்தரசிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கட்டிப்போட்ட ஒரு நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் பலத்த எதிர்ப்பு இருந்தாலும், நாட்கள் செல்ல செல்ல மவுசு கூடிக்கொண்டே போனது.

இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கியது தான் பல ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் பார்க்க காரணமாக இருந்தது. கமல்ஹாசன் முதன் முதலாக தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சி இதுவே. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் எப்போது தொடங்கும் என்ற கேள்வியை விட, அதனை தொகுத்து வழங்குவது யார்..? என்ற கேள்வியே ரசிகர்கள் மனதில் பிரதானமாக இருந்தது.

இந்நிலையில், பிக்பாஸ் இரண்டாவது சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குவார் என்ற தகவல்கள் நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிகின்றன.


இதன் மூலம், தனது கட்சியின் கொள்கைகளை நேரடியாக அனைவரின் மனதிலும் கொண்டு செல்ல முடியும் என நம்புகிறார் கமல். ஊர் ஊராக சுற்றுப்பயணம் செய்து தனது கொள்கைகளை விளக்கி வரும் கமல்ஹாசனுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி பொன்னான வாய்ப்பாக அமையும்.

அதே நேரம், இந்த இரண்டாவது சீசனில் மிகவும் பிரபலமான நடிகர், நடிகைகளை பங்கேற்க்க வைப்பது என்ற முடிவில் இருக்கிறதாம் என்டமோல் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம். இதற்கு கமல்ஹாசனும் உதவி வருவதாக கிசுகிசுக்கிறார்கள்.

இந்நிலையில், பிக்பாஸ் சீசன் இரண்டையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குவுள்ளது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி