இயற்கை பட நாயகியின் கணவர் யார் தெரியுமா..? இவருக்கா இப்படியொரு நிலைமை..!!


தமிழ் சினிமாவில் 2000 முதல் 2005 ஆண்டுகளில் வெளிவந்த பல திரைப்படங்கள் பொக்கிஷம் என்று தான் சொல்ல வேண்டும். இந்த ஆண்டுகள் இடைவெளியில் பல புதிய புதிய வித்யாசமான திரைப்படங்கள் வெளிவந்தது. தமிழ் சினிமாவில் பெரிய வித்யாசமான திரைப்படங்கள் இந்த காலகட்டத்தில் தான் வெளிவந்தது என்றுதான் சொல்லவேண்டும்.

அந்த வரிசையில் 2003 இல் ஷாம் நடிப்பில் வெளிவந்த இயற்கை படத்தில் நடித்தவர் ராதிகா குமாரசாமி. இவர் தமிழ் படத்தில் நடித்தால் குட்டி ராதிகா என்று அழைக்கப்பட்டார்.


இவர் கர்நாடகாவை சேர்ந்தவர் 1986 இல் மங்களூரில் பிறந்தார் . இவருக்கு சிறு வயது முதலே நடிப்பின் மீது ஆறாம் இருந்துள்ளது. இவர் தனது 13வது வயதிலேயே 2002 இல் நிணங்கி என்ற கன்னட படத்தில் நடித்தார். அந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆக அதே ஆண்டில் 5 படங்களில் இவர்க்கு வாய்ப்பு கிடைத்தது . இப்படி தனது சிறு வயதிலே சினிமா உலகை கலக்கியவர் இவர்.

தனது திறமையின் மூலம் பல பட வாய்ப்புகளை அள்ளிய இவர் பின்னர் ரத்தன் குமார் என்ற நபர் தனக்கும் ராதிகாவிற்கும் 2000 இல் திருமணம் நடந்ததாகவும் தற்போது ராதிகா நடிகையாக இருப்பதால் அவரது தந்தை தேவராஜ் ராதிகாவிற்கு திருமணம் நடந்ததை மறைப்பதாகவும் வழக்கு பதிவு செய்தார்.


இதனால் ராதிகாவிடம் விசாரணை நடத்தப்பட்டது பின்னர் 2002 இல் ரத்தன் குமார் மாரடைப்பால் காலமானார் என்று செய்திகள் வந்தது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு 2013 இல் மீண்டும் படங்களில் நடிக்கத்துவங்கிய குட்டி ராதிகா தற்போது காண்ட்ராக்ட்,பைர தேவி, ராஜ போபண்ணா போன்ற கன்னட படங்களில் நடித்து வருகிறார். மேலும் பட வாய்ப்புகள் இவரை தேடி வருகின்றனவாம், முக்கிய கதாபாத்திரத்தை தவிர்த்து குணசித்திர நடிகையாகவும் இவர் நடிகின்றாராம்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி