பிரபல பாலிவுட் நடிகர் 50 வயதை கடந்தும் திருமணம் செய்யாமல் இருக்க என்ன காரணம் தெரியுமா..?


பாலிவுட்டில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் நடிகர் சல்மான் கான். 50 வயதை கடந்தும் இவர் இன்னும் திருமணம் செய்யவில்லை என்பதால் ஒவ்வொருமுறை அவர் மீடியாவிடம் பேசும்போது திருமணம் பற்றிய கேள்வி நிச்சயம் நிருபர்கள் கேட்டுவிடுவார்கள்.

இன்றும் அப்படித்தான் நடந்தது. திருமணம் எப்போது என கேட்டதற்கு சல்மான் கான் காமெடியான ஒரு பதிலை கூறினார். “திருமணம் செய்வதெல்லாம் இப்போது பெரியவிஷயமாகிவிட்டது. லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் செலவு செய்து திருமணம் செய்கிறார்கள். ஆனால் அதற்கு என்னிடம் பணம் இல்லை, அதனால் தான் நான் இன்னும் சிங்கிளாக இருக்கிறேன்” என சல்மான் கூறினார்.

இந்தியாவிலேயே அதிகம் வசூல் ஈட்டும் படங்களின் ஹீரோவாக நடித்து கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஒரு நடிகர் இப்படி பேசியது பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி