கடும் கோபத்தை வெளிப்படுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த்..!! ட்விட்டரில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!!


ரஜினியின் 2.0 பட டீசர், அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்பே இன்று சோஷியல் மீடியாக்களில் லீக் ஆனது.

ஷங்கர் டைரக்க்ஷனில் ரஜினிகாந்த் நடித்துள்ள இந்த படத்தின் டீசர், காலா படத்தை தொடர்ந்து வெளியாகியுள்ளதால் படக்குழுவினர் மீள முடியாத ஷாக்கில் உள்ளனர்

இந்த படத்தின் டீசர் லீக்கானது குறித்து தயாரிப்பாளரும், ரஜினியின் மகளுமான சவுந்தர்யா ரஜினிகாந்த் கடும் கோவத்தில் உள்ளார், மேலும் இதற்காக கண்டனம் தெரிவித்துள்ளார்.


இது குறித்து சவுந்தர்யா ரஜினிகாந்த் தன்னுடைய ட்விட்டர் பகுதியில், முன்னோட்டத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்னரே ஆன்லைனில் லீக் ஆனது ஏற்றுக்கொள்ளவோ ஊக்குவிக்கவோ முடியாது

தயாரிப்பாளர்களின் உணர்வுகளை ஒதுக்கி வைத்து விட்டு, சில நொடி ஆர்வத்திற்காக ஆன்லைனின் 2.0 பட டீசர் லீக் ஆனது மனசாட்சி இல்லாத செயல் என தெரிவித்துள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி