சூப்பர் ஸ்டாரின் காலா டீசரை பார்த்த ரசிகர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா..?


புதுக்கட்சி துவங்குகிற நேரத்தில் புளியம் பழத்தை சப்பியது போல ஒரு டீசர் வந்தால் என்னாவது என்கிற அச்சம் பெரும்பாலானவர்களுக்கு இருந்தது. (ரஜினி ரசிகர்கள் அவர் எதை செய்தாலும் ரசிப்பார்கள். அது வேறு விஷயம்) ‘ட்ரெய்லர் நல்லாதான் இருந்திச்சு. படம்தான் பபுள்கம் மாதிரி சவ்வா இழுத்திருச்சு’ என்று கபாலி நேரத்தில் விமர்சித்தவர்களுக்குதான் இந்த அச்சம்.

ஆனால் அந்த அச்சத்தையெல்லாம் துச்சமாக்கித் தள்ளியிருக்கிறது காலா டீசர். ரஜினியின் என்ட்ரியும், அவர் பேசுகிற வசனங்களும் மாஸ்னா மாஸ். அப்படியொரு தெறி மாஸ். கபாலியின் மைனஸ்களை பா.ரஞ்சித் இதில் களைந்திருப்பார் என்றே நம்ப வைக்கிறது இந்த டீசர் நிமிஷங்கள்.


ரஜினியின் புதுக்கட்சி அறிவிப்பும் அதை எதிர்கொள்ளும் மக்களின் மனநிலையும், இந்த டீசர் வரவேற்பில் வெளிப்பட்டிருக்கிறதா என்றால், ஆமாம் என்றுதான் சொல்ல வேண்டும். வெளிவந்து ஆறு மணி நேரத்தில், அல்லது 12 மணி நேரத்தில் பார்த்தவர்களின் எண்ணிக்கை, விஜய்யின் மெர்சல் டீசரை பார்த்தவர்களின் எண்ணிக்கையை விட குறைவு என்கிறது ஒரு தகவல்.

எது எப்படியோ? ரஜினியை கிழட்டு சிங்கம் என்று விமர்சிப்பவர்களின் முன்னே, தான் எப்போதும் ஒரு முரட்டு சிங்கம்தான் என்று நிரூபித்திருக்கிறார் அவர்.

ரஜினி ரிட்டையர் ஆவதற்குள், இளம் ஹீரோக்களுக்குதான் வயதாகும் போல தெரிகிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி