இந்த பாட்டி யாருனு நினைவிருக்கா..? இப்ப என்ன செய்றாங்கனு தெரியுமா..?


ரங்கம்மாள் பாட்டி பல படங்களில் நடித்துள்ளார், சமீபத்தில் பாட்டி ரங்கம்மாள் பண கஷ்டத்தால் கடற்கரையில் பிச்சை எடுக்கிறார் என்று தகவல்கள் இணையத்தில் படு வைரலானது

ஆனால் ரங்கம்மாள் பாட்டி பிச்சை எடுக்கவில்லை என்றும் சின்ன சின்ன பொருள்களை விற்றுவருதாக தகவல்கள் வந்தது.

இதுகுறித்த ஒரு பேட்டியில் ரங்கம்மாள் பாட்டி கூறியது,


நான் என்னிடம் உள்ள சின்ன சின்ன பொருட்களை விற்று உழைத்து சம்பாதித்து வருகிறேன். யாரிடமும் பிச்சை கேட்கவில்லை. இணையத்தில் வைரலானது தவறான தகவல்

நான் நன்றாக தான் இருக்கிறேன், அன்றாட தேவைக்காக ஷூட்டிங்கை தாண்டி பொருட்களை விற்று சம்பாதித்து வருகிறேன் என்றார்.

அதோடு, ரங்கம்மாள் பாட்டிக்கு மொத்தம் 12 பிள்ளைகளாம். அதில் இவரது பெண்ணின் மகள், சிம்பு நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்புவிற்கு தங்கையாகநடித்திருக்கிறார் என்பது கூடுமான தகவல்

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி