ரஜனியின் காலா படத்திற்கு இப்படியொரு அர்த்தமா..? எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்..!!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாகவுள்ளது. கோடிக்கணக்கான ரஜினி ரசிகர்கள் இந்த டீசரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்திய திரையுலகின் பல சாதனைகளை இந்த டீசர் உடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாகவுள்ளது. கோடிக்கணக்கான ரஜினி ரசிகர்கள் இந்த டீசரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்திய திரையுலகின் பல சாதனைகளை இந்த டீசர் உடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் ரஜினியின் கேரக்டர் ‘காலா’ என்பதும் அவரது கேரக்டரில் தான் படத்தின் டைட்டிலும் அமைந்துள்ளது என்பதும் தெரிந்ததே. ஆனால் இந்த படத்தில் அவருடைய முழு பெயர் ‘காலா சயித்’ ( என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த கேரக்டர் பாட்ஷா பாய்’ போல் ரசிகர்களிடையே பிரபலமாகும் என்று கூறப்படுகிறது.


மேலும் ரஜினியின் மனைவியாக ஈஸ்வரிராவ் நடித்திருக்கும் கேரக்டரின் பெயர் செல்வி என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நானா படேகர், சமுத்திரக்கனி, ஹூமோ குரேஷி, சம்பத்ராஜ், அர்விந்த் ஆகாஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை தனுஷின் வொண்டர்பா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் காலா இன்னொரு பாட்ஷா வா என்றும் ஒரு சில கேள்விகள் எழுகின்றது அதே நேரத்தில் பாட்ஷா 2 என்றா என்றும் கேள்வி எழுந்துள்ளது காரணம் சூப்பர் ஸ்டாருக்கு இகவும் பிடித்த படம் பாட்ஷா அதன் இரண்டாம் பாகம் எடுக்கவேண்டும் என்ற என்னும் அவருக்கு உண்டு ஆகவே இது பாட்ஷா 2 என்று ஒரு சில செய்திகள் கசிந்துள்ளது

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி