மறைந்த நடிகை திவ்ய பாரதிக்கும், ஸ்ரீதேவிக்கும் என்ன தொடர்பு..? அதிரவைத்த அதிர்ச்சி தகவல்..!!


பார்பதற்கு அச்ச அசல் ஸ்ரீதேவி போலவே தான் இருப்பார் திவ்ய பாரதியும். முக தோற்றம் மட்டுமல்ல, நடிப்பும், பாவனைகளும் கூடவே ஸ்ரீதேவி போலவே தான் இருந்தது. கிட்டத்தட்ட ஸ்ரீதேவியின் தங்கை என்றும், ஜூனியர் ஸ்ரீதேவி என்றும் தான் அழைக்கப்பட்டார் திவ்ய பாரதி. தனது இளம் வயதிலேயே நடிக்க வந்துவிட்டார் இவர்.

மூன்றே வருடத்தில் முன்னணி நாயகிகளுக்கு இணையாக வளர்ந்தார். பெரும் பட்ஜெட் படங்களில், பெரிய நடிகர்களுடன் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், எதிர்பாராத நேரத்தில், இவரது பால்கனியில் இருந்து தவறி விழுந்து இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. இந்தியாவில் மர்மமான முறையில் இறந்த பிரபலங்களின் பட்டியலில் திவ்ய பாரதியும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


நடிகை ஸ்ரீதேவியின் மரணத்திற்கு பிறகு, இவரது மரணம் பற்றிய செய்திகளும் ஆங்காங்க தூசித்தட்டப் படுகின்றன. யாரும் வழக்காட போவதில்லை எனிலும், இவர்கள் இருவரின் மரணத்தின் நடுவே சில தகவல்கள், விஷயங்கள் வியப்பை ஏற்படுத்துகின்றன.

90களில் காண்பதற்கு நிஜமாகவே அக்கா, தங்கை போல தான் இருந்தனர் ஸ்ரீதேவியும், திவ்ய பாரதியும். திடீரென்று யாராவது இவர்கள் இருவரையும் கண்டால் கொஞ்சம் ஆச்சரியத்தில் பூரித்து போய்விடுவார்கள். முகத்தில் மட்டுமின்றி, மரணத்திலும் கூட திடீரென உயிரிழந்து ரசிகர்களை, திரை துறையினரை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது இவர்களது இழப்பு.

90-களில் இவர்கள் இடையே வெளிப்படையாக பெரிய போட்டி நிலவவில்லை என்றாலும் கூட, வாய்ப்புகள் கைமாறி போயின. இவரின் தேதிகளில் யாருடையது கிடைக்கிறதோ அவரை வைத்து படங்கள் தயாரிக்க ஆரம்பித்தனர்.


காரணம் இவருவரும் ஒரே மாதிரி இருந்தது என்று கூறப்படுகிறது. இதனால், பிஸியாக இருந்த காரணத்தால் ஸ்ரீதேவிக்கு வந்த வாய்ப்புகள் திவ்ய பாரதிக்கும், திவ்ய பாரதிக்கு போக வேண்டிய வாய்ப்புகள் ஸ்ரீதேவிக்கும் மாறி, மாறி சென்றுள்ளன.

நடிகை ஸ்ரீதேவி இறந்த தினம் பிப்ரவரி 24 இரவு 11.30 மணி. திவ்ய பாரதியின் பிறந்த நாள் பிப்ரவரி 25. ஒருவருடைய இறப்பு நாளும், மற்றொருவருடைய பிறப்பு நாளும் அடுத்தடுத்து அமைந்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

சரியாக, திவ்ய பாரதி இறந்து 25 ஆண்டுகள் கழித்து ஸ்ரீதேவி மரணம் அடைந்துள்ளார்.


ஏப்ரல் 5,1993ம் நாள் எதிர்பாராத விதமாக நடிகை திவ்ய பாரதி குடி போதையில் தனது பால்கனியில் இருந்து கீழே விழுந்து இறந்தார் என்ற செய்தி வெளியானது. ஆரம்பத்தில் கார்டியாக் அரஸ்ட் என்று கூறப்பட்டாலும், மும்பை போலீஸ் வெளியிட்ட இறப்பு அறிக்கையில் நடிகை ஸ்ரீதேவி இறந்த போது அவரது இரத்தத்தில் ஆல்கஹால் கலப்பு இருந்தது அறிய வந்தது.

இருவரின் இறப்புக்கும் போதை ஓர் காரணமாகவும், ஒற்றுமையாகவும் அமைந்துள்ளது. இதுவும் ஒரு மர்மமான சூழலை ஏற்படுத்துகிறது.

கடைசியாக ஏறத்தாழ பாதிக்கும் மேலான காட்சிகளை திவ்ய பாரதி நடித்து முடித்திருந்த லாட்லா என்ற திரைப்படம். மீண்டும் ஸ்ரீதேவியை வைத்து எடுக்கப்பட்டது. இந்த படத்தின் ஸ்ரீதேவியுடன் அணில் கபூர், ரவீனா டாண்டன் போன்றவர்கள் நடித்திருந்தனர்.


அணில் கபூர் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

இந்தி திரையுலகில் நடிக்க வந்த மிக குறிகிய காலக்கட்டத்தில் பெரும் புகழ் அடைந்த நடிகைகில் திவ்ய பாரதியும் ஒருவர். இவர் 1990-ல் நடிக்க வந்தார். 1990-93 இடைப்பட்ட மூன்றே வருடத்தில் 13 படங்களில் நடித்தார் திவ்ய பாரதி.

இந்த காலக்கட்டத்தில் அவர் ஏற்கனவே பெரிய நடிகர்களுடன், பெரிய பட்ஜெட் படங்களில் ஜோடி சேர்ந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீதேவி போலவே ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் இந்தியில் மிக பிஸியான நடிகையாக இருந்தார் திவ்ய பாரதி. திவ்ய பாரதி வளர்ந்து வந்த நேரத்தில் ஸ்ரீதேவி இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாகவும், இந்தியாவிலேயே அதிக ஊதியம் வாங்கி வந்த நடிகையாகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இருமொழி படங்களிலும் கிட்டத்தட்ட ஸ்ரீதேவிக்கு ஒரு மாற்று நடிகையாக மட்டுமின்றி, போட்டி நடிகையாகவும் வளர துவங்கினார் திவ்ய பாரதி.

திவ்ய பாரதிக்கு ஷோலா அவுர் ஷப்னம் என்ற படத்தின் போது இந்தி நடிகர் கோவிந்தா மூலமாக சஜித் நதியத்வாலா என்பவருடன் பழக்கமானார். இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர, இருவரும் 1992 மே மாதம் 10ம் தேதி திருமணம் செய்துக் கொண்டனர். திருமணத்திற்கு பிறகு திவ்ய பாரதி இஸ்மால் மதத்திற்கு மாறினார். தனது பெயரையும் சானா நதியத்வாலா என்று மாற்றிக் கொண்டார்.

திவ்ய பாரதி ஏப்ரல் 5,1993 அன்று இரவு 11 மணிக்கு மேல் மும்பையில் இருந்த தனது அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து தடுமாறி கீழே விழுந்து இறந்தார் என்று அறியப்பட்டது.

அருகே இருந்த கூப்பர் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று கூறினார்கள். அவரது தலையில் பலத்த காயமும், அதிக இரதப்போக்கும் ஏற்பட்டதே மரணத்திற்கு காரணம் என்று கூறப்பட்டது.


நடிகை ஸ்ரீதேவியின் மரணமும் இரவு 11.30 மணிக்கு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

திவ்ய பாரதியின் கணவருக்கு நிழலுக தாதாக்களுடன் தொடர்பு இருந்ததாகவும், அதனால் யாரேனும் கொலை செய்திருக்கலாம், அவரே தற்கொலை செய்துக் கொண்டாரா, அல்ல அவர் மது போதையில் இருக்கும் போது அவரை பின்னாடி இருந்து யாரேனும் தள்ளிவிட்டனரா? என்று போலீஸ் பல கோணங்களில் விசாரித்தது.

ஆனால், போதிய ஆதாரம் அல்லது காரணங்கள் இல்லாத காரணத்தால் இவரது வழக்கை மும்பை போலீஸ் 1998ல் மூடியது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி