விசுவாசம் படத்தில் அஜித்துக்கு காத்திருந்த அதிர்ச்சி..!! அப்படியொரு கேரக்டரே இல்லையாமே..!!


அஜித்-சிவா கூட்டணியில் தயாராகும் விசுவாசம் என்ற 4வது படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

சில நாட்களாக படத்தில் நடிக்கும் மற்ற கலைஞர்கள் பற்றிய விவரங்கள் வெளியாகிக் கொண்டு இருக்கிறது. தம்பி ராமைய்யா கமிட்டாகி இருப்பது நேற்று வந்த தகவல்.

இந்த நிலையில் படத்தில் அஜித் வேடம் குறித்து சில தகவல்கள் கசிந்துள்ளன. அதாவது, வட சென்னை தமிழ் பேசும் நபராக அஜித் நடிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது பின்னி மில்லில் ஒரு நிஜ கிராமம் போன்ற செட் போடப்பட்டு வருவதாகவும், இதனால் வீரம் போன்ற ஒரு கிராமிய பின்னணி கொண்ட படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதோடு பெரும்பாலும் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை காஸ்ட்யூமில் தான் அஜித் நடிக்க இருக்கிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி