வைரலாகியது விக்ரமின் சாமி 2 லோகோ..!! பாருங்க அசந்துருவீங்க..!!


ஹரி இயக்கத்தில் விக்ரம்,த்ரிஷா நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த படம் சாமி, இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது, தற்பொழுது நீண்ட காலங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்து எடுத்து வருகிறார்கள்.

படத்தில் கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா, சூரி, பிரபு, உமா ரியாஸ் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். ‘தமீம் பிலிம்ஸ்’ தயாரிக்கும் இப்படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்து வருகிறார். வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள இப்படத்தின் லோகோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.


மேலும் முதலில் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், த்ரிஷா இரு நடிகைகளும் நடிப்பதற்கு கமிட் ஆனார்கள் ஆனால் த்ரிஷாவுக்கு இந்த படத்தில் முக்கிய ரோல் இல்லாததால் அவர் விலகி கொண்டார்,ஆனால் த்ரிஷாவை எப்படியாவது சமாதனம் படுத்திவிடலாம் என நினைத்து கொண்டு கீர்த்தி சுரேஷ் சீன்களை முதலில் படமாக எடுத்தார்கள் பின்னர் த்ரிஷாவிடம் எவ்வளவு கேட்டும் அவர் நடிப்பதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

பின்னர் த்ரிஷா இறந்தது போல் காட்டிவிடலாம் என நினைத்துள்ளார்கள் ஆனால் த்ரிஷாவோ என் புகைப்படத்தை கூட பயன்படுத்த கூடாது என திட்டவட்டமாக கூறியுள்ளார் இதனால் என்ன செய்வது என படக்குழு தவித்து வருகிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி