சின்ன நமபர் நடிகையை மேடையில் கேவலப்படுத்திய சங்கத் தலைவர்..!! அதற்காக இப்படியொரு முடிவா..?


ஆர்.கே.நகர் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட முயன்றபோது தன் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதும் ’திட்டம்போட்டு சதி செய்து என் மனுவை தள்ளுபடி செய்ய வைத்துவிட்டார்கள். இது என்ன நியாயம்?’ என்று கொதித்தார் விஷால்.

ஆனால் அவர் மீது ‘சர்வாதிகார தோரணையில் தமிழர்களை நிர்வாகிகள் பதவியிலிருந்து தூக்கி எறிகிறார் விஷால். தமிழ் திரையுலக சங்கங்களை தெலுங்கர்களின் பிடிக்குள் கொண்டு வர முயல்கிறார்.’ என்று சொல்லி பாய்ந்து பிறாண்டுகிறார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.
அவர் தனது ஆவேச அறிக்கையில்…

“மறைமுகமாக தமிழ்த் திரையுலகில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாகி வருகிறது.

நடிகர் சங்கத்தில் 350 பேர் தமிழர்கள் தூக்கி வீசப்பட்டுள்ளனர். டெக்னீஸியன் யூனியனில் 1800 பேர், அதேபோல் நேற்று தமிழ்த் தயாரிப்பாளர்கள் 20 பேர் தற்காலிக நீக்கம் செய்யப்படுள்ளனர். அதில் பத்து பேர் பென்சன் வாங்குபவர்கள். உச்சநீதிமன்ற ஆணைப்படி பென்சன் வாங்குபவர்களின் பயனை எந்த விதத்திலும் நிறுத்தி வைக்க கூடாது! என்பதை மீறி அவர்களின் பென்சனை நிறுத்தி வைத்திருக்கிறார்.


இதிலிருந்து விஷாலின் சர்வாதிகாரத்தை புரிந்து கொள்ளுங்கள். தன்னை யாரும் கேள்வி கேட்டுவிடக்கூடாது, மீறி கேடால் அவனை தூக்கு! என்கிறார். இதென்ன மடமா? துரத்துவதற்கு!…சட்ட விதிகள் நிறைந்த சங்கங்கள். இதுவரை சங்கங்களின் வரலாற்றில் நடைபெறாத அளவில் தமிழர்கள் நீக்கம்….எதற்கெடுத்தாலும் வேலை நிறுத்தம் இதுதான் விஷாலின் பதவி படுத்தும் பாடு.

தமிழர்களை மறைமுகமாக ஓரங்கட்டிவிட்டு தன் இன்மான தெலுங்கு கரை பக்கமுள்ளவர்களுக்கே எல்லா பதவிகளிலும் முன்னுரிமை தருவது என்பதை தொடர்ச்சியாகவும், தெளிவான அரசியலாகவும் செய்து வருகிறார் விஷால்.

விஷாலின் சர்வாதிகார போக்கையும், தமிழ் மக்களுக்கு எத்ரான அரசியலையும் வெகு அருகே இருந்து பார்ப்பதால் கேள்வி எழுகிறது. அதை தைரியமாக ஊடகத்தின் முன் கொண்டு செல்கிறேன். எல்லோரும் சேர்ந்து அவரை கேள்வி கேட்க வேண்டும். ஒதுங்கி போகக்கூடாது. இன்னும் ஒதுங்கிக் கொண்டே போவீர்களேயானால், ஒருநாள் சேறு உங்கள் மீதும் வீசப்படும். அன்று கேள்வி கேட்டால் அது பயன் தராது. தமிழ் நடிகர்களை ஒதுக்கும் போக்கும், தெலுங்கு பேசும் நடிக, நடிகைகளை புகழ் பெற வைக்கவும், அவர்களை மட்டுமே படங்களில் கமிட் பண்ண வைப்பதும் நடக்கிறது.

தமிழ் நடிகர்களான சிம்பு, வடிவேலு, த்ரிஷா ஆகியோரின் பிரச்னைகள் இரு சங்க சுவர்களுக்குள் பேசித் தீர்க்கப்பட வேண்டியவை. ஆனால் அவற்றை வேண்டுமென்றே, திட்டமிட்டு பொது விழாவில் பேசி அவப்பெயரை உருவாக்குகிறார்.


சினிமவென்பது அரசியலுக்கு ஒரு பலம், அதுவும் பக்கத்திலிருக்கும் பெரிய பலம். அன்று அம்மாவும், கலைஞர் அய்யாவும் இதை தெரிந்து வைத்திருந்தனர். ஆனால் தற்போது முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி இதை புரிந்து கொள்ள வேண்டும். தெலுங்கு பாசம் இல்லையென்றால், ஏன் ஆர்.கே.நகரில் விஷால் களமிறங்க முயலவேண்டும்?

அய்யா ராமதாஸ், அண்ணன் சீமான், திருமா, வேல்முருகன், இயக்குநர் கெளதமன் ஆகியோர் இதில் தலையிட வேண்டும். தமிழ் திரையுலகை தமிழருக்கான இடமாக மாற்ற கடுமையான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

இது முக்கியமான நேரம். இந்த நேரத்தில் தமிழ் சினிமா உலகில் தமிழர்களுக்கான முக்கியத்துவத்தை பெற்றுத்தர தமிழ் அமைப்புகள் களமிறங்க வேண்டும்.” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் சுரேஷ் காமாட்சியின் இந்த குற்றச்சாட்டுக்களை “தவறான நோக்கத்தில் சித்தரிக்கப்பட்ட, பொய்யான, அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள். தமிழ் திரையுலகை இவர் சொல்வது போல் மாற்று மொழி ஒன்றின் பிடியில் கொண்டு வரும் நோக்கமெல்லாம் விஷாலுக்கு இல்லவேயில்லை.

இவர் இப்படியே பேசிக் கொண்டிருந்தால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வைப்போம்.” என்று விஷால் தரப்பு எச்சரித்துள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!