அந்த மாதிரி நடிக்க என்னால் முடியும்..!!! கன்னக் குழி நடிகை அதிரடி முடிவு..!!!


கன்னக்குழி அழகி சிருஷ்டி டாங்கே பல படங்களில் நடித்தும் இன்னும் முன்னணிக்கு வரமுடியவில்லை. அவர் நடிப்பில் காலக்கூத்து, ஒரு நொடியில், பொட்டு படங்கள் வெளிவர உள்ளது.

இது தவிர சத்ரு படத்தில் நடித்து வருகிறார் இதற்கிடையிடல் சிருஷ்டி நடித்துள்ள மலையாளப் படமான 1971 பியாண்ட் பார்டர் வெற்றி பெற்றிருப்பதால் மலையாள பட வாய்ப்பும் வருகிறது. இதனால் சிருஷ்டி பிசியாக இருக்கிறார்.

“நான் தமிழ் சினிமாவுக்கு வந்து 7 வருடங்கள் ஆகிறது. ஒவர் நைட் சக்சஸ் எதையும் சந்திக்கவில்லை. படிப்படியாக வளர்ந்திருக்கிறேன்.

இடையில் எத்தனையோ சோதனைகள், அவமானங்கள் அனைத்தையும் தாண்டியிருக்கிறேன். எந்த பின்புலமும் இல்லாமல் தன்னந்தனியாக மும்பையில் இருந்து வந்து இங்கு சாதிப்பது சாதாரண விஷயம் இல்லை.


மலையாளத்தில் மோகன்லாலுடன், தமிழில் உதயநிதியுடன் நடிக்கிறேன் என்றால் இந்த இடத்திற்கு வர கடுமையாக உழைத்திருக்கிறேன்.

இரண்டு, மூன்று ஹீரோயின்கள் சப்ஜெக்டில் நடிப்பதாக சொல்கிறார்கள். அதில் என்ன தவறு என்று தெரியவில்லை ஹீரோக்களே இணைந்து நடிக்கும்போது ஹீரோயின்கள் நடிக்க கூடாதா.

டார்லிங், எனக்குள் ஒருவன், முப்பரிமாணம் படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்தேன். அதையும் விமர்சித்தார்கள். ஆனால் நான் நெகட்டிவ் கேரக்டர்களில் நடித்த படங்கள்தான் என்னை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறது.

அதனால் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க எனக்கு தயக்கம் இல்லை. கதை ஒரு கேரக்டரை எப்படி வடிவமைத்திருக்கிறதோ அப்படியே போகிஒநடிப்பதுதான் நடிகையின் வேலை. என்கிறார் சிருஷ்டி டாங்கே.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி