நடிகையிடம் அடி வாங்கிய வைகைபுயல்..!! பதிலடி கொடுக்க என்ன செய்தார் தெரியுமா..?


தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகர்களில் ஒருவர் வடிவேலு. காமெடியில் உச்சத்தில் இருக்கும் வடிவேலு நடித்தால் கதாநாயகனாகத்தான் நடிப்பேன் என உறுதியாக இருந்தார். இதனால் தனி காமெடி ட்ராக்கை தவிர்த்து வந்தார்.

இந்த நிலையில் மீண்டும் சிவலிங்கா படத்தில் காமெடி ட்ராக்கில் நடித்தார். இதில் ஹீரோயினாக நடித்தவர் ரித்திகா சிங்.


இவர் உண்மையிலேயே குத்து சண்டை வீராங்கனை என்பது வடிவேலுவுக்கு தெரியாது.

இதனால் அந்த படத்தில் வடிவேலுவை ரித்திகா சிங் அடிப்பது போன்று ஒரு காட்சியை இயக்குனர் வாசு படமாக்கினார்.

அப்போது ரித்திகா சிங் உண்மையிலேயே அடித்து விட்டாராம். அந்த வலி 5 நாட்கள் இருந்ததாம். இதனை அவரே பட விழாவில் தெரிவித்து இருந்தார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி