காமெடி நடிகரின் வாய்ப்பில் தளபதி நடித்து ஹிட் ஆன படம்..!! இயக்குனரால் வெளியான அதிர்ச்சி தகவல்..!!!


இயக்குனர் எழில் இயக்கதில் நடிகர் விஜய் சிம்ரன் நடித்து வெளிவந்து மெகா ஹிட் ஆன படம் துள்ளாத மனமும் துள்ளும் .

இந்த படம் அந்த காலகட்டதில் மிக பெரிய வசூல் சாதனை புரிந்தது. அதன் பிறகு எழில் பல வெற்றி படங்களை கொடுக்க ஆரம்பித்தார்.

இந்நிலையில் இப்படம் பற்றி யாருக்கும் தெரியாத சில விஷயங்களை இயக்குனர் எழில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அதில் இந்த படத்தை முதலில் நடிகர் வடிவேலுவை நினைத்து தான் எழுதினேன் .


பின்னர் கதையை அவரிடம் கூறிய போது நடிப்பதற்க்கு ஒப்பு கொண்டார். பிறகு படத்துக்கு தயாரிப்பாளர் தேடிய போது கிடைக்காததால் முரளியிடம் சொன்னேன்.

அவரை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர் கிடைக்காத்ததால் பின்னர் இந்த வாய்ப்பு விஜய்க்கு சென்றது.

கதை கேட்ட அடுத்த நாளே விஜய் படத்தில் நடிக்க ஒப்புகொண்டார். விஜய் நடிக்கிறார் என்றதும் ஆக்ஷன் காட்சிகள், பாடல்கள் என கமர்ஷியலாக சில மாற்றங்கள் செய்தோம்.

இவ்வாறு இயக்குனர் எழில் தான் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி