இதுக்காக மட்டும் எதற்கு வரனும் அந்த ஆன்மீக அரசியல்வாதி..!! திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்..!!


ரஜினிகாந்த் இன்று ட்வீட்டியுள்ளதை பார்த்த மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்தார் ரஜினிகாந்த். தனிக் கட்சி துவங்கி தமிழக சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடப் போகிறார். கட்சி துவங்குவது தொடர்பான வேலைகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.

ஊதிய உயர்வு உட்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அது குறித்து ரஜினி வாயே திறக்கவில்லை. மக்கள் பாதிப்பு தமிழக அரசு திடீர் என்று பேருந்து கட்டணத்தை ஒரேயடியாக உயர்த்திவிட்டது.


பேருந்தில் பயணம் செய்தால் பணக்காரன் என்று நினைக்கும் அளவுக்கு கட்டணம் உயர்ந்துவிட்டது. அமைதி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தியபோதும் சரி, பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டபோதும் சரி, வைரமுத்து சர்ச்சையில் சிக்கியபோதும் சரி ரஜினி கண்டுகொள்ளவே இல்லை.

தலைவரே போர் வந்துவிட்டது வாங்க வந்து ஏதாவது செய்யுங்க என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கதறியும் அவர் கண்டுகொள்ளவில்லை. இப்படியா? இருக்கும் இடம் தெரியாமல் இருந்துவிட்டுப் போக ஆசைப்படும் ரஜினி ஏன் அரசியலுக்கு வர வேண்டும் என்று நெட்டிசன்ஸ் கேள்வி எழுப்பியுள்ளனர்.


இதை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ் போட்டுள்ளனர் மீமஸ் கிரியேட்டர்கள்.

வாழ்த்து பிரச்சனைகள் நடந்தபோது எல்லாம் அமைதியாக இருந்த ரஜினி இன்று குடியரசு தின வாழ்த்து தெரிவித்து ட்வீட்டியுள்ளது மக்களை கடுப்படைய வைத்துள்ளது. இப்ப மட்டும் வந்துட்டாருப்பா ஆன்மீக அரசியல்வாதி என்று கலாய்க்கிறார்கள்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி