அதிக திருமணம் செய்து கொண்ட சினிமா பிரபலங்கள்..!! யார் யார்னு தெரியுமா..!!


சினிமா வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கும் நடிகர், நடிகைகளில் ஒரு சிலரது வாழ்க்கை சந்தோஷமாக இருப்பது இல்லை.

முக்கியமாக திருமண வாழ்க்கை தோல்வியில் முடிகிறது. எனவே விவாகரத்து பெற்று அடுத்தடுத்து திருமணங்களை செய்து கொள்கின்றனர்.

அதன்படி அதிக திருமணங்களை செய்து கொண்டவர்களில் நடிகர் கமல்ஹாசன் முதல் ராதிகா வரை ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களை செய்துள்ளனர்.


அதன்படி கமல்ஹாசன் தனது முதல் மனைவி வாணி கணபதியை பிரிந்து சரிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவரையும் பிரிந்து கவுதமியுடன் சில காலம் குடும்பம் நடத்தினார்.

நடிகை ராதிகா முதலில் பிரதாப் போத்தனை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு ரிச்சர்ட் என்பவரை மணந்து கொண்டார். 3வதுதாக சரத்குமாரை திருமணம் செய்து அவருடன் வசித்து வருகிறார்.


அதே போல சரத்குமார் சாயா என்ற முதல் மனைவியை பிரிந்துதான் ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

பாக்கியராஜ் முதலில் பிரவீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர் உயிரிழந்தவுடன் நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்டார். நடிகை லட்சுமிக்கு பாஸ்கர், மோகன், சிவசந்திரன் என 3 கணவர்கள்.


ஜெமினி கணேசனுக்கு அலமேலு, புஷ்பவல்லி என்ற இரண்டு மனைவிகள் இருக்கும்போதே நடிகை சாவித்திரியை 3வதாக காதலித்து மணந்து கொண்டார்.

அதே போல புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு தங்கமணி, சதானந்தவதி மற்றும் ஜானி என 3 மனைவிகள். ரூநடிகர் கார்த்திக் நடிகை ராகிணியை திருமணம் செய்து கொண்டு பின்னர் அவரது தங்களை ரதியையும் மணந்து கொண்டார்.

மேலும் பிரகாஷ் ராஜ், யுவன் ஷங்கர் ராஜா, செல்வராகவன், அரவிந்த்சாமி ஆகியோர் இரண்டு திருமணங்களை செய்து கொண்டவர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி