அந்த நடிகருக்கு போட்டியாக இந்த ஹீரோவா..? அப்படி என்னதான் கொலைவெறி இவருக்கு..!!


சிவகார்த்திகேயனை எனது தம்பி என அழைத்து வந்தவர் தனுஷ். அவரை தனது 3 படத்தில் நடிக்க வைத்து அழகு பார்த்தார்.

பின்னர் எதிர்நீச்சல் படத்தில் ஹீரோவாக்கி பெரிய வெற்றியை சுவைக்க வைத்தார். இன்று சிவகார்த்திகேயனின் வளர்ச்சியானது வளர்த்துது விட்ட தனுசை விட அதிகமானது.

மேலும் இருவருக்கும் மோதல் என கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இருவருமே மறுத்து வருகின்றனர். ஆனாலும் இருவருமே இதுவரை பேசிக் கொள்ளவில்லை.


இந்த நிலையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தீனாவை தனுஷ் தனது பவர் பாண்டி படத்தில் நடிக்க வைத்தார். தற்போது தனது வொன்டர் பார் நிறுவனத்தின் மூலம் தீனாவை ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார்.

இது சதாரண நிகழ்வாக தெரிந்தாலும், சிவகார்த்திகேயனுக்கு போட்டியாகத்தான் தீனாவை உருவாக்குகிறார் என கூறப்படுகிறது. தற்போது இதுதான் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

வீடியோக்களை Whatsapp, Email இல் பெற Subscribe!: http://goo.gl/ptkCWB