எனக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை..!! ஸ்ருதி ஹாஸன் ஓபன் டாக்..!!


காதலரை திருமணம் செய்து கொள்ளப் போவது குறித்து நடிகை ஸ்ருதி ஹாஸன் மனம் திறந்துள்ளார். ஸ்ருதி ஹாஸன் புதுப்படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை. அவர் லண்டனை சேர்ந்த நாடக நடிகர் மைக்கேல் கார்சேலை காதலித்து வருகிறார். மைக்கேல் அடிக்கடி இந்தியா வந்து ஸ்ருதியுடன் நேரம் செலவிடுகிறார்.

ஸ்ருதி மைக்கேல் இந்தியா வந்துவிட்டு நாடு திரும்பிய கையோடு ஸ்ருதி ஹாஸன் லண்டன் சென்றார். இருவரும் அடிக்கடி சந்தித்து காதலை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். மைக்கேல் விரைவில் திருமணம் செய்து செட்டில் ஆகும் ஐடியா இல்லை.

என் காதல் விவகாரம் என் தனிப்பட்ட விஷயம்.


அதை பற்றி பொது இடங்களில் பேச விரும்பவில்லை என்கிறார் ஸ்ருதி.

நான் அண்மையில் மோதிரமோ, மாலையோ மாற்றிக்கொள்ளவில்லை. நான் மகிழ்ச்சியாக உள்ளேன் என்று ஸ்ருதி ஹாஸன் தெரிவித்துள்ளார். அவர்கள் இந்த ஆண்டு திருமணம் செய்யக்கூடும் என்று கூறப்படும் நேரத்தில் ஸ்ருதி இப்படி கூறியுள்ளார்.

ஸ்ருதி புதிய பட வாய்ப்புகளை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஸ்ருதியின் தங்கையான அக்ஷரா சீயான் விக்ரமின் படத்தில் நடிக்க உள்ளார்.

வீடியோக்களை Whatsapp, Email இல் பெற Subscribe!: http://goo.gl/ptkCWB