பழம்பெரும் நடிகை கிருஷ்ணகுமாரி காலமானார்..!! சோகத்தில் மூழ்கியது திரையுலகம்..!!


தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 1950களின் புகழ்பெற்ற கதாநாயகி கிருஷ்ணகுமாரி உடல்நல குறைவால் மரணமடைந்தார்

1950களில் புகழ்பெற்ற கதாநாயகி நடிகை கிருஷ்ணகுமாரி, அவர் சிவாஜிகணேசன், எம் ஆர் ராதா, என்டி ராம ராவ், எம் என் நம்பியார், விகே ராமசாமி, கல்யாண்குமார் ஆகியோருடன் நடித்தவர். இவர் தெலுங்கு படம் முலம் திரையுலகிற்கு வந்தவர். மேலும் பக்த கண்ணதாச என்ற திரைப்படம் தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்றது. இதனையடுத்து இந்த படம் வழியாக ஹிந்தியிலும் வெளியாகி வெற்றிபெற்றது.

இவர் தமிழில் திரும்பி பார்(1953), அழகி(1953), மனிதன்(1953), புதுயுகம்(1954), விடுதலை(1954), துளிவாசம்(1954), கார்கோட்டை(1954), தென்றல் வாசம்(1962) உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.

இவருக்கு சிறிது காலமாக உடல் குறைவு ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக இவர் 85 வயது நெருங்கிய நிலையில் இன்று(ஜன.,24) பெங்களூருவில் மரணமடைந்தார். இவருக்கு திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

வீடியோக்களை Whatsapp, Email இல் பெற Subscribe!: http://goo.gl/ptkCWB