பிரபல இயக்குனர் மீது செருப்பை தூக்கி வீசிய மிஷ்கின்..!! எதற்காக தெரியுமா..?


மிஷ்கின் எழுதி, தயாரித்து நடித்துள்ள படம் சவரக்கத்தி. இந்த படத்தை ஆதித்யா இயக்கியுள்ளார். ராம், பூர்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆரல் கரோலி இசையமைத்துள்ளார்.

சவரக்கத்தி செய்தியாளர்கள் சந்திப்பின்போது மிஷ்கின் கூறியதாவது,

தமிழ் சினிமாவில் தலைப்பு கொடுப்பதில் பல பிரச்சனைகள் மற்றும் குழப்பங்கள் உள்ளது. நான் இறந்து போனால் ஒரு 50 ஆண்டுகள் கழித்தும் என்னை பற்றியும், என் படத்தை பற்றியும் மக்கள் பேச வேண்டும் என்று விரும்புகிறேன்.


போஸ்டரில் தம்பி ஆதித்யாவின் பெயருக்கு பதில் என் பெயர் பெரிதாக வந்துள்ளதற்கு அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அவனை தம்பி என்று சொல்லக் கூடாது. அசிஸ்டன்ட். நான் அஞ்சாதே படம் எழுதிக் கொண்டிருந்தபோது கதவை திறந்து கொண்டு எட்டிப்பார்த்து அசிஸ்டன்டாக வேண்டும் என்றான். செருப்பை தூக்கி எறிந்தேன். ஓடிப் போயிட்டு 5 ஆண்டுகள் கழித்து திரும்பி வந்தான்.

அவன் என்னிடம் அசிஸ்டன்டாக வேலை செய்யும் தகுதி இல்லை என்றேன். பார்த்திபன் உள்ளிட்டோரிடம் வேலை செய்து 5 ஆண்டுகள் கழித்து வந்து என்னிடம் அசிஸ்டன்டாக சேர்ந்தான். நான் உறவினர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டேன். யாரையாவது பரிந்துரை செய்வார்கள்.

இந்த படத்தால் எனக்கு ஒரு பைசா வராது, இதுவரை வரவும் இல்லை.


இந்த படத்தை எடுத்ததில் எனக்கு லாபம் தேவையே இல்லை. என் படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறிய அந்த 4 பெரிய நடிகைக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் நடித்திருந்தால் என் படம் குட்டிச்சுவராகப் போயிருக்கும்.

பூர்ணா அர்ப்பணிப்புடன் நடித்துள்ளார். சொந்தக் குரலில் தமிழில் டப்பிங் பேசியுள்ளார். இந்த படத்தின் வெற்றிக்கு 90 சதவீதம் பூர்ணாவை காரணம் என்பேன்.

என் படத்தை தியேட்டரில் தான் பாருங்க என்று சொல்ல மாட்டேன். தமிழ் ராக்கர்ஸும் ரிலீஸ் பண்ணுங்க. அவரவர் வேலையை பார்ப்போம். எம்.ஜி.ஆர். சிவாஜி படங்களை மெய்மறந்து பார்த்திருக்கிறேன். எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல் இல்லை என்றால் நாம் தற்கொலை செய்திருப்போம். அவர்கள் இல்லை என்றால் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போயிருக்கும் என்றார் மிஷ்கின்.

வீடியோக்களை Whatsapp, Email இல் பெற Subscribe!: http://goo.gl/ptkCWB