ஜனங்களுக்கு நல்லது செய்யனும்னா அரசியல்ல முடியாது..!! பரபரப்பை ஏற்படுத்திய ரஜினிகாந்த்..!!


ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம்தான் இப்போதைய ஹாட் டாபிக். இது கடந்த 25 வருடத்திற்கும் மேலாக தொடர்ந்து வந்த பேச்சு. இப்போதுதான் இதற்கு முடிவு கிடைத்துள்ளது.

கடந்த 1995ம் ஆண்டு பாட்ஷா படம் வெளிவர இருந்த நேரத்தில் ரஜினியின் பேட்டியை போட அனைத்து பத்திரிகைகளும் போட்டி போட்டன. அப்போது அவர் தேர்ந்தெடுத்தது குமுதம் பத்திரிக்கையை.

ரஜினியை சுஜாதா பேட்டி எடுத்தார். அப்போது அரசியல் ஈடுபாடு இல்லையா என ரஜினியிடம் சுஜாதா கேட்டார்.

அதற்கு ரஜினி கொஞ்சம் கூட இல்லை. எதுக்காக அரசியல், பணம், புகழ், ஜனங்களுக்கு நல்லது செய்யனும்.


இதுக்காகத்தானே. ஆண்டவன் புண்ணியத்திலே எனக்கு பணம், புகழ் ரெண்டுமே இருக்கு.

ஜனங்களுக்கு நல்லது செய்யனும்னா. இப்ப இருக்கிற அரசியல் நிலைமைல யாராலும் ஜனங்களுக்கு நல்லது செய்ய முடியாது. இது நல்லா தெரியும்போது எதுக்காக அரசியலுக்கு வரனும்.

தனி மனிதனால ஒன்னும் செய்ய முடியாது. எல்லாமே மாறனும். ஒட்டு மொத்தமா மாறனும். இப்ப இருக்கிற சிஸ்டம்ல யாராலயும் ஒன்னுமே செய்ய முடியாது. சிஸ்டம் மொத்தமா மாறினாத்தான் உண்டு என்றார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி