வெட்டு, குத்து காட்சிகளை குழந்தைகளிடம் அறிமுகப்படுத்துகிறார்கள்: தங்கர் பச்சான் வருத்தம்

தங்கர் பச்சான் ‘கருமேகங்கள் கலைகின்றன’ என்ற படத்தை டைரக்டு செய்துள்ளார். இதில் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கவுதம்மேனன், அதிதி பாலன், விபின் லால், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பட நிகழ்ச்சியில் தங்கர் பச்சான் வருத்தமுற்று பேசும்போது, ‘படங்களை எடுக்கவும், விற்கவும், மக்களை படம் பார்க்க வரவழைக்கவும் சிரமப்பட வேண்டி இருக்கிறது. மக்களிடம் நல்ல சினிமாவை கொண்டு போவதற்கு பல தடைகள் இருக்கின்றன. ரூ.500 கோடி வசூல் என்பதில் என்ன பெருமை? நல்ல படங்கள் நிறைய வந்தால் சமூகம் மேலே வரும். நல்ல படங்களை மக்கள் பார்க்க வேண்டும். பெரிய நடிகர் படம் என்கிற பெயருக்காகவே படம் பார்க்க தயாராக இருக்கிறார்கள். படங்களில் வெட்டு, குத்து காட்சிகளை குழந்தைகளிடம் அறிமுகப்படுத்துகிறார்கள். அதில் நடிக்கும் நடிகர்களுக்கு பொறுப்பு இருக்காதா?

இயற்கை விவசாயம் செய்வதை போல, நல்ல படங்களை கொடுத்து வருகிறேன். ஆனால் எங்களுக்கு தண்டனைதான் கொடுத்து வருகிறீர்கள். ‘கருமேகங்கள் கலைகின்றன’ உடலை, மனதை கெடுக்காத உணர்வுப்பூர்வமான படம். உலகத் தமிழர்கள் இந்த படத்தை பார்த்தால் இங்கே கிளம்பி வந்து விடுவார்கள்” என்றார்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!