ஜெயம் ரவி – நயன்தாராவின் ‘இறைவன்’ பட அப்டேட்

‘வாமனன், ‘என்னென்றும் புன்னகை’, ‘மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அஹமத். இவர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இறைவன்’. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

‘இறைவன்’ திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் டிரைலர் 2 நிமிடம் 33 வினாடிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த டிரைலரை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!