விஜய் சேதுபதி 50-வது படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதியின் 50-வது படத்தை ‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கி பிரபலமடைந்த இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்குகிறார். இப்படத்தில் நட்டி (எ) நட்ராஜ் சுப்ரமணியம், முனீஷ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர். இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!