வாத்தி கம்மிங்கை பீட் செய்த “நா ரெடி”- 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார்.

இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இதற்கிடையே, ‘லியோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய்யின் பிறந்த நாளான நேற்று சரியாக 12 மணிக்கு லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்.

இதையடுத்து இப்படத்தின் முதல் பாடலான “ஆல்டர் ஈகோ நா ரெடி” பாடலின் லிரிக் வீடியோ இன்று வெளியானது. இந்நிலையில், இப்பாடல் வெளியான சில நிமிடங்களில் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது. இது, மாஸ்டர் படத்தின் வாதி கம்மிங் பாடல் ரிலீசான சில நிமிடங்களில் இருந்த பார்வையாளர்களைவிட, “நா ரெடி” பாடலின் பார்வையாளர்கள் அதிகம்.

மேலும், நா ரெடி பாடல் ஒரு மணி நேரத்தில் ஐந்து மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. தொடர்ந்து, 10 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது. இதனை சோனி மியூசிக் சவுத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!