அஜீத்தின் சூப்பர் ஹிட் படத்தை ரீமேக் செய்ய ஆசைப்படும் லோகேஷ்..

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இப்போதைய சூழலில் சென்சேஷனல் இயக்குனராக இருக்கிறார். இதற்கு காரணம் இவருடைய சமீபத்திய வெற்றி படங்கள் தான். வித்தியாசமான கதைக்களம், விறுவிறுப்புகளுடன் சேர்ந்த சஸ்பென்ஸ் காட்சிகள் என ரசிகர்களை சீட்டின் நுனியில் உட்கார வைத்துவிடுவார். ஹாலிவூட் படங்களை போல் லோகேஷ் யூனிவர்ஸ் என சினிமா ரசிகர்களை கைக்குள் வைத்து இருக்கிறார்.

2017ல் ‘மாநகரம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் அடுத்தடுத்து கைதி, மாஸ்டர், விக்ரம் என பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்திருக்கிறார். குறுகிய காலத்திலேயே டாப் ஹீரோக்களான விஜய், கமல் ஹாசன் போன்றோருடன் இணைந்து பணியாற்றி விட்டார். இப்போது நடிகர் விஜய்யின் 67 வது படத்தின் வேலைகளை தொடங்கி இருக்கிறார்.

சினிமா ரசிகர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் லோகேஷ், நிறைய ஹீரோக்களுடன் இணைந்து படம் பண்ண வேண்டும் என்பது ரசிகர்களின் கனவு. தளபதி விஜய்க்கு மாஸ்டர் போன்ற ஒரு வெற்றி படத்தை கொடுத்த லோகேஷ் அஜித்துடன் படம் பண்ண வேண்டும் என்பது அஜித் ரசிகர்களின் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பாகவே இருக்கிறது.

சமீபத்திய ரசிகர்கள் சந்திப்பின் போது லோகேஷ் கனகராஜிடம் இதுபற்றி கேள்வி கேட்கப்பட்டது. அஜித்தின் ஏதாவது ஒரு படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என்றால் எந்த படத்தை ரீமேக் பண்ணுவீர்கள் என்று கேட்ட போது லோகேஷ், அஜித்தின் தீனா படத்தை ரீமேக் செய்வேன் என்று கூறியிருக்கிறார். இப்போது அஜித் ரசிகர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய கனவாக மாறிவிட்டது.

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் அஜித் நடிப்பில் 2001 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் தீனா. இந்த படம் அஜித்திற்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படத்திற்கு பிறகு தான் அஜித் ‘தல’ என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார். இந்த படத்திற்கு பிறகு தான் நடிகர் அஜித்திற்கு ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவானது.

அஜித்தின் சூப்பர் டூப்பர் ஹிட் படமான தீனாவை, லோகேஷ் கனகராஜ் ரீமேக் செய்ய ஆசைப்படுவது அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. ஏற்கனவே லோகேஷ் யூனிவர்சில் கைதி, மாஸ்டர், விக்ரம் என மூன்று கதைகளும் ஒன்றிணைய வாய்ப்பிருக்க இதில் தீனா கதையும் இணைந்தால் நன்றாக இருக்கும் என்பது ரசிகர்களின் கருத்து.

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!