பிரியா பவானி சங்கர் நிஜத்திலும் பொம்மை மாதிரி தான் இருக்கிறார்.. எஸ்.ஜே.சூர்யா புகழாரம்

அஜித் நடிப்பில் கடந்த 1999-ம் ஆண்டு வெளியான ‘வாலி’ படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே.சூர்யா. அதன்பின்னர் குஷி, நியூ, அன்பே ஆருயிரே, இசை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். மேலும் கள்வனின் காதலி, வியாபாரி, நண்பன், மெர்சல், மாநாடு, டான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது ராதா மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொம்மை’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஜூன் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் படவெளியீட்டை முன்னிட்டு, படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த நிகழ்ச்சியில், நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேசியதாவது, நடிகர் எஸ் ஜே சூர்யா பேசியதாவது, ‘பொம்மை’ திரைப்படம் நன்றாக வந்துள்ளது. இந்தப் படத்தில் வரும் காதல் கதையே வித்தியாசமாக இருக்கும். இயக்குனர் ராதா மோகன் சாருக்கு தான் அந்த பெருமை சேரும். பிரியா பவானி சங்கர் படத்தில் பொம்மையாக நடித்துள்ளார், ஆனால் நிஜத்தில் அவர் பார்ப்பதற்கும் பொம்மை தான் அவ்வளவு அழகு. படத்தில் நடித்துள்ள அத்தனை கதாபாத்திரமும் சிறப்பாக வந்துள்ளது.

யுவன் சாரின் பாடல்கள் அனைத்துமே நன்றாக இருக்கிறது. ஒளிப்பதிவு மிகவும் அழகாக இருந்தது. படப்பிடிப்பின் பாதியிலேயே கொரோனா வந்துவிட்டது, ஆனாலும் அது படத்திற்கு உதவியாகத்தான் இருந்தது. படத்தின் பின்னணி இசைக்காகவே படத்தைப் பார்க்கலாம் நான் அதற்கு உறுதி அளிக்கிறேன். இயக்குனர் ராதா மோகன் என்னிடமிருந்து நல்ல நடிப்பை வாங்கியுள்ளார். இந்த படத்தின் காட்சிகள் எனக்கு நல்ல பெயரை வாங்கித் தரும் என்று நம்புகிறேன். இந்த படம் உணர்வுகளின் அடிப்படையில் உருவான படம். இந்தப் படத்தை மக்களிடம் கொடுத்து விடுகிறேன். அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி என்று கூறினார்.

மேலும், நடிகை பிரியா பவானி சங்கர் பேசியதாவது, ‘பொம்மை’ ஜூன் 16-ஆம் தேதி வருகிறது. நிறைய ஆசைப்பட்டு செய்த படம். மனதுக்கு நெருக்கமான படம். இது ராதா மோகன் சாரின் படம் அவ்வளவுதான். ஒவ்வொரு காட்சியிலும் அவர் வைக்கும் உயிரோட்டம் அப்படியே தெரிந்தது. அவர் சொல்லித் தந்ததைச் செய்தாலே போதும். ஒரு நல்ல மனிதராக அவருடன் பழகியது சந்தோஷமான அனுபவம். எஸ்.ஜே. சூர்யா சாருடன் இரண்டாவது படம், இதில் தயாரிப்பாளராகவும் இருந்தார். ஒரு பக்கம் நெருப்பாக இருப்பார் இன்னொரு பக்கம் கூலாக நடிப்பார். ஒவ்வொரு டேக்கிலும் வித்தியாசமாகத் தரப் போராடுவார். எனக்கு நந்தினி கேரக்டர் தந்ததற்கு ராதா மோகன் சாருக்கு நன்றி. படம் கண்டிப்பாக நல்ல படைப்பாக இருக்கும் அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி என்று பேசினார்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!