ராணி முகர்ஜி படத்திற்கு நார்வே எதிர்ப்பு

நடிகை ராணி முகர்ஜி நடித்திருக்கும் மிசஸ்.சாட்டர்ஜி விசஸ் நார்வே திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆஷிமா சிப்பர் இயக்கியிருக்கும் இந்தப்படத்தில் ஒரு பெங்காலி தாய் நார்வே நாட்டில் கணவருடன் வசித்து வரும் போது தன்னுடைய குழந்தைகளை பராமரிப்பதில் நார்வே நாட்டு சட்ட திட்டத்தை கடைபிடிக்கவில்லை என்று கூறி, அவரிடமிருந்து குழந்தையை பறித்து நார்வே நாட்டு அதிகாரிகள் காப்பகத்தில் வைக்கிறார்கள். இந்தக் குழந்தைகளை இந்திய அரசின் உதவியோடு சட்டப் போராட்டம் நடத்தி மீட்கும் தாயாக ராணி முகர்ஜி நடித்திருந்தார்.

இதன் டிரைலர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதோடு ராணி முகர்ஜியின் நடிப்பிற்கு பாராட்டும் கிடைத்தது, படம் வெளியாகி இருக்கும் இந்த நேரத்தில் நார்வே நாட்டின் தூதரக அதிகாரிகள் திரைப்படத்தைப் பார்த்து விட்டு தங்கள் நாட்டின் சட்டம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார்கள். மேலும் ஒரு தாய் கையால் குழந்தைக்கு உணவு கொடுப்பதாலும் ஒரே படுக்கையை கொடுப்பதாலுமே கடுமையாக சட்டம் செயல்படுத்தப்படும் என்பது தவறு என்று கூறியிருக்கிறார்கள்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!